சேலம்,
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு சேலத்தில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது.

தமிழக ஆதிவாசிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அவ்வமைப்பின் மாநில அமைப்பாளர் ரங்கநாதன், மாநிலத் தலைவர் வெங்கடேசன், மாநிலசெயலாளர் குணசேகரன், மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், ஆதிவாசி மக்களுக்கு தமிழக அரசு விரைந்து பட்டா வழங்க வேண்டும். ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளை தமிழக அரசு எல்லை மறுவரையறை செய்து 5 ஆவது அட்டவணையில் அறிவிக்க வேண்டும். மத்திய அரசால் இயற்றப்பட்ட வன உரிமை அங்கீகார சட்டம் 2006ஐ தமிழகத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: