தருமபுரி;
கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள கூடுதல் நீரால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தருமபுரி,சேலம் மாவட்டங்களில் காவிரி
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள இரு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் காவிரி
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத் துள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர், தமிழக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு வெள்ளிக்கிழமையன்று வந்து சேரும். இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள தால் மேட்டூர் காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. பி.என்.பட்டி கிராமத்தில் உபரிநீர் போக்கி பகுதியில் உள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவில் நீர்வரத்து உள்ளதால் மேட்டூர்
அணையில் இருந்து டெல்டா பாசனத் திற்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தமிழ கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இத னால் மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்கள் இயக்க 32ஆவது நாளாக தடை நீடிக்கிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம்-117.50 அடி, நீர்இருப்பு-89.53 டிஎம்சி. நீர்மின் நிலையங்கள் வழியாக 22,500 கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 2,500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.