திருவனந்தபுரம்,
கேரளா அரசு விசைப்படகு கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தமிழக மீனவர்கள் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கன்னியாக்குமரி மாவட்டம் ராமன்துறையைச் சேர்ந்த ஓசானி என்ற படகில் ராமன்துறை, முள்ளூர்துறை, மணக்குடியைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்கள் உள்பட 14 பேர் கடந்த 6ஆம் தேதி கேரளாவின் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அந்த வழியே வந்த கப்பல் மீது படகு மோதியதில் படகு மூழ்கியது. இதில் படகில் சென்ற 14 பேரும் கடலில் தத்தளித்தனர். அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் ஒருவரை மட்டுமே மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலில் மூழ்கிய13 பேரில் ராமன்துறையைச் சேர்ந்த யாக்கப், சகாய ராஜ், முள்ளூர்துறையைச் சேர்ந்த சகாயராஜ் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே காணாமல்பான 10 பேரும் மூழ்கிய படகுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த படகை கடலுக்கு அடியில் கடற்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: