சென்னை,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு) 2018-2019 ஆம் ஆண்டிற்கு ஒற்றை சாளர முறையில் பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.  6 அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளில் 396 இடங்களும், 23 சுயநிதி கல்லூரிகளில் 916 இடங்களும் உள்ளன. கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீடுகள் மத்திய அரசின் ஆயுஷ் துறையால் அங்கீகரிக்கப்படும் நிலையில் இடஒதுக்கீடுகளின் எண்ணிக்கைகள் கலந்தாய்வின்போது மாறும் நிலை ஏற்படும்.  விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 14.08.2018 முதல் 05.09.2018 வரை சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம் மற்றும் கோட்டார் அரசு இந்திய முறை மருத்துவக்கல்லூரி முதல்வர்களிடமிருந்து அலுவலக வேலை நாட்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பொது பிரிவு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மற்றும் சிறப்பு பிரிவு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. விண்ணப்பங்கள் கடைசி நாளான 05.09.2018 மாலை 3.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு குழுவிற்கு கடைசி நாளான 05.09.2018 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதுகுறித்து எந்த தகவலும் தனியாருக்கு தெரிவிக்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி www.tnhealth.org பார்க்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.