சனா;
உள்நாட்டுப் போர் தீவிரமாக நடை பெற்று வரும் ஏமனில், குழந்தைகள் சென்ற
பேருந்து மீது விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் பலியாகினர்.
ஏமனில் சவூதி அரேபியா தலைமை யிலான கூட்டுப்படை உக்கிரமான தாக்குதல்
களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில் வியாழனன்று காலை வடக்கு ஏமனில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற
பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர்
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு
குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. சவூதி கூட்டுப்படை பேருந்து மீது வான்
தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 39 பேர் இறந்ததாகவும், 51 பேர்
காயமடைந்திருப்பதாகவும் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால்
கூட்டுப்படை தரப்பில் வான் தாக்குதல் நடத்தியதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

உள்நாட்டு போர் நடைபெறும்பொது பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என
சர்வதேச மனிதாபிமான சட்டம் சொல்வதாகவும், அதனை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்கு
தலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் ரெட் கிராஸ் அமைப்பு கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: