ஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு

“ஊடக சுதந்திரத்தில் அரசு செய்யும் தலையீடுகளை” இந்திய ஊடக ஆசிரியர்கள் அமைப்பு(எடிட்டர்ஸ் கில்டு) வன்மையாகக் கண்டித்துள்ளது. “நேரடியாக ஆசிரியர்களை மிரட்டுவது அல்லது ஊடக உரிமையாளர்கள்  மூலம் அதைச் செய்வது என இரு வழிகளில் அந்த தலையீடு உள்ளது” என்று அது சுட்டியுள்ளது. ஒரு டி வி யிலிருந்து ஆசிரியர்களை வெளியேற்றி யது, இன்னொரு டி வியின் ஒளிபரப்பிற்கு ஊறுவிளைவித்தது என்பதை
இதற்கான எடுத்துக்காட்டுகளாக அது குறிப்பிட்டுள்ளது. அரசின் இந்த மிரட்டல்களுக்கு ஊடக உரிமையாளர்கள் பணிந்து விடக் கூடாது, “பணிந்தால் ஊடகத்தின் வலுவும் மரியாதையும் பறிபோய்விடும்” என்றும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது. (டிஒஐ ஏடு) சம்பந்தப்பட்டவர்களின் செவிகளில் இது விழும் என்று எதிர்பார்ப்போம். கூடவே, கருத்து சுதந்
திரத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பேராபத்தை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து நின்று போராடுவதும் அவசியமாகும்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: