ஜெகர்தா,
இந்தோனேசியாவில் லோம்போக் தீவில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் 6.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதாரம் குறித்த விபரங்கள் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவின் சுற்றுலாத்தலமான லோம்போக் தீவில் கடந்த ஞாயிறன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படைத்தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கு விரைந்து ஏற்பாடு செய்யுமாறு உயரதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: