புதுதில்லி. ஆக. 9-

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதனின் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்க விலை நிர்ணயத்தி, விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்துவிதமான கடன்களையும் தள்ளுபடி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மேற்கொண்ட சிறைநிரப்பும் போர் நானூறு மாவட்டங்களில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.

தமிழகத்தில் மட்டும் திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் நகரில் பல்லாயிரக்கணக்கான விவசாயப் பெண்கள், சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் இனி தற்கொலை செய்ய மாட்டார்கள், உரிமைகளுக்காகப் போராடுவார்கள் என்று அப்போது அவர்கள் முழக்கமிட்டனர்.

ஆந்திராவிலும் பல மாவட்டங்களில் சிறைநிரைப்பும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றன.

திரிபுராவில்

திரிபுரா மாநிலத்தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற சிறைநிரப்பும் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்துகொண்டு உரையாற்றினார். போராடிய மக்கள் மீது பாஜக அரசாங்கம் தண்ணீர் குண்டுகளை (water canon) பீய்ச்சி அடித்திருக்கிறது. குண்டாந்தடிகளாலும் பல இடங்களில் தாக்குதல் தொடுத்திருக்கிறது.

மேற்கு வங்கம்‘

மேற்கு வங்கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.