புதுதில்லி;
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரி வித்துள்ளது.
மக்களவையில் புதனன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்திய குடிமக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்
விண்ணப்பிக்க முடியும். வெளிநாடு வாழ்இந்தியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 – இன்படி இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக
வும் விண்ணப்பிக்க முடியும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர் www.rtionline.gov.in என்ற இணைய தளத்தில், எந்த அமைச்சகத்தின் கீழ் தகவல்களை பெற வேண்டுமே அதை தேர்வு செய்து, தகவல் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு தெளிவான விளக்கங்கள், அடிக்கடி கேட்கப்
படும் கேள்விகள் என்ற பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்ப கட்டணத்தையும் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தை யும் விண்ணப்பதாரார்கள் பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: