உதகை.
கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததையடுத்து, அதைக் கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்குசொந்தமான இரண்டு மாடுகள் அருகிலுள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. சிறிது நேரம் கழிந்து அங்கு சென்று ஆறுமுகம் பார்த்தபோது, மேய்ச்சலுக்கு சென்ற இருமாடுகளும் மர்ம விலங்கு தாக்கி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி வனச்சரகர் சீனவாசன், கால்நாடை மருத்துவர் ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சிறுத்தை தாக்கி மாடுகள் இறந்தது தெரியவந்தது. குடியிருப்புகளுக்கு மிக அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, அந்த சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறையினரிடம் வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: