===க.ராஜ்குமார்==                                                                                                                                                               கலைஞர் மறைந்தார்.அரசு ஊழியர் – ஆசிரியர்களின் அன்பிற்குரிய தலைவர் மறைந்தார்.அவர் முதலமைச்சராக இருந்தபோது ஆறு முறை கோரிக்கைகள் குறித்து நேரடியாக பேசியுள்ளேன்.

எழுந்து நின்று வரவேற்பதும் வழியனுப்புவதும் அவரின் உயரிய பண்பாகும்.
கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்து பேச்சுவார்த்தையின் போது நேர
டியாக அவரே சங்க நிர்வாகிகளிடம் விவாதிப்பது வழக்கம். ஏற்கக் கூடிய கோரிக்கைகளுக்கான அரசு ஆணைகளுடன் சந்திப்பதும் அவரது வழக்கமாக இருந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கத்தின் 8 ஆம் மாநில மாநாட்டின் அழைப்பிதழை அவரிடத்தில் கொடுத்தபோது அதில் ‘8வது’ மாநாடு என்றிருந்ததை திருத்தி‘வது’ என்பது சரியல்ல; ‘ஆம்’ என்றே குறிப்பிட வேண்டும் என்றுரைத்தார். பொது மாநாட்டிற்கு முன்னதாகவே வருகை தந்தார். உரையாற்றும்போது சங்கத்தின் தலைவர்களை தோழர்களே என்று அழைத்தார்.
பிரதிநிதிகள் மாநாட்டிற்கு விடுப்பு தந்தார். தலைமைச்செயலாளர், உள்துறை செயலா
ளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர்களை பங்கேற்க வைத்தார். மாநாடு துவங்க சில மணி நேரங்கள் இருக்கையில் கோபாலபுரத்திற்கு அழைத்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநாடுக
ளுக்கு அழைக்கப்பட்டவர். பங்கேற்றவர்.ரகசியக் கோப்பு ஒழிப்பு, இறந்தால் பத்தாயிரம் என
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பல உரிமைகளை வழங்கியவர்.கலைஞர் உண்மையிலே ஒரு சகாப்தம்தான்.

கட்டுரையாளர் : முன்னாள் பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.