கடலூர்,
என்எல்சி கூட்டுறவு நாணயச் சங்கம், மின்வாரிய கூட்டுறவு பணியாளர் சங்க தேர்தல்களில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்.

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. பல இடங்களில் ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதால் நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதித்தது.  பின்னர் ,தேர்தலை நடத்தலாம். நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து பலகட்டங்களாக நடைபெற்ற வழக்கில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்க தடைகளை விலக்கி சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 3 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஹாட்ரிக் வெற்றி!
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட நெய்வேலி கூட்டுறவு நாணய சங்கத் தேர்தலில் சிஐடியு, தொமுச, அதொமுச, பாமக, விசிக உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் 41 பேர் போட்டியிட்டனர். இதில், சிஐடியு சார்பில் போட்டியிட்ட இந்திரா, அன்பழகன், வீராசாமி, ஆரோக்கியதாஸ், தாமோதரன், கார்த்திகேயன், லட்சுமணன், மணி மாறன் ஆகிய 8 பேரும் வெற்றி பெற்றனர்.  இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பாராட்டு நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திரு அரசு, நகரச் செயலாளர் பாலமுருகன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மீனாட்சிநாதன், நெய்வேலிசங்க பொதுச் செயலாளர் ஜெய ராமன், தலைவர் வேல்முருகன், பொருளாளர் சீனுவாசன், அலுவலக செயலாளர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வெற்றியின் மூலம் மூன்றா வது முறையாக கூட்டுறவு நாணயச் சங்கத்தை சிஐடியு கைப்பற்றி உள்ளது குறிப்பிடதக்கது.

Leave A Reply

%d bloggers like this: