புதுச்சேரி,
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் நடைபெற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தினை திரும்பபெறக் கோரி நாடு முழுவதும் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத் திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  இதனடிப்படையில் மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி மறைமலை அடிகள்சாலை அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வளமாக சென்று புதிய பேருந்து நிலையம் எதிரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இப்போராட்டத்திற்கு மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேசச் செயலாளர் ஜி.சீனுவாசன், துணைத் தலைவர் குணசேகரன், ராமசாமி, இணை செயலாளர்கள் மதிவாணன், பிரபுராஜ், ஏஐடியுசி மாநில நிர்வாகி தினேஷ்பொன்னையா, ஐஎன்டியுசி நிர்வாகி குமார், முத்துராமன், தொமுச நிர்வாகி அண்ணா அடைக்கலம், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி பஷிர், ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக புதுச்சேரியில் நடைபெற்ற ஆட்டோ,டெம்போ, தனியார் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.