சென்னை: 

   திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்க செய்ய சென்னை மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தினுடைய மூத்த தலைவராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும், எதிர்கட்சி தலைவராகவும், தமிழக அரசியலில் முத்திரைப்பதித்த டாக்டர் கலைஞர் அவர்களது உடல் அடக்கம் செய்திட, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானதாகும். இத்தனை சிறப்புகள் படைத்த ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு, மெரினா கடற்கரையில் இடம் தர தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும். இப்பிரச்சனையில் அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும்.

திமுக தலைவர் கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்திட இடம் ஒதுக்கி தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை அழுத்தமாக வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: