கோவை,
சிறப்பாசிரியர்கள் பணி நியமன சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது, போலிகளை கண்டறிய வேண்டும் என சிறப்பாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் பணி இடத்திற்கான போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவை மாவட்ட தேர்வர்களுக்கு வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதிசான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. மொத்தம் 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3 ஆயிரம் 903 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சான்றிதழ் சரிபார்ப்பின்போது போலிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தையல் ஆசிரியர்கள் இன்டஸ்டிரியல் பள்ளிச்சான்று என்பது ஒராண்டு தொழிலாசியர் பயிற்சி. அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மூன்று மாதம் மட்டுமே. சிறப்பாசிரியர் பணியிடத்திற்கான ஆசிரியர் பயிற்சி. தையல் ஆசிரியர் நியமனத்தில் இது போன்ற குளறுபடி சான்றிதழ்களை கண்டறிய வேண்டும் என தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம் மனு அளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: