உதகை,
கோத்தகிரி அரசு மருத்துவமனையை புனரமைத்து மேம்படுத்திட வேண்டும் என வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 8வது தாலுகா மாநாடு ஈளாடா காந்தி நகரில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தாலுகா தலைவராக டி.சுந்தர், செயலாளராக வி.மணிகண்டன், பொருளாளராக ராமசந்திரன், துணைத்தலைவராக மாரிமுத்து, துணை செயலாளராக மணிவண்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இம்மாநாட்டில் கோத்தகிரி பகுதி எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் தங்கும் விடுதியில் தண்ணீர் பற்றாகுறையை போக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். கோத்தகிரி அரசு மருத்துவமனையை புனரமைத்து மேம்படுத்திட வேண்டும். கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் இ சேவை மையத்தை விரிவுபடுத்தி பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் விரைவாக கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: