சென்னை,
கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினா சாலையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை  தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம்  நிராகரித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று மாலை 6.10மணியளவில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று பிற்பகலில் கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவைச் சந்தித்ததையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

இதன் பின்னர் 80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தகாரர் கருணாநிதி. அவரை  அடக்கம் செய்ய அண்ணா சமாதி அருகே  இடம் அளிக்க வேண்டும்.  உரிய மரியாதை, அரசியல் ரீதியான தார்மீக அடிப்படையில் மெரினாவில் இடம் வழங்க வேண்டும் என்று என்று முதல்வருக்கு எழுதியிருந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு முதல்வர் நேரடியாக பதில் அளிக்காமல் அரசு தலைமை செயலாளர் மூலம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் மெரினாவில் அடக்கம் செய்வது குறித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருககிறது. எனவே மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க முடியாது. அதற்கு  பதிலாக மாற்று இடம் வழங்கப்படும். அண்ணா பல்கலை கழகம்  அண்ணா பல்கலைக்கழகம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் உள்ள ராஜாஜி, பக்தவச்சலம் ஆகியோர் நினைவிடங்களுக்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். அதில் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு தரப்பினரும் மெரினா அருகே கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திமுக வினர் மெரினால் இடம் ஒதுக்க வேண்டும் என ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: