கோவை,
ஏபிடி கூட்டுறவு நாணய கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றிக்கு நடைபெற்ற தேர்தலில் சிஐடியு சங்கத்தினர் உதவி தலைவர் மற்றும் இயக்குநர்கள் இடங்களை கைப்பற்றினர்.

ஏபிடி கூட்டுறவு நாணய கடன் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட எம்.அருணாசலம் எம்.தமிழ்செல்வன், கே.செவந்தியப்பன், ஏ.பால்ராஜ், ஆர்.ஆறுமுகம் ஆகியோர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் திங்களன்று தலைவர் மற்றும் உதவி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் உதவி தலைவராக சிஐடியுவைச் சேர்ந்த எம்.அருணாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் ஏபிடி கூட்டுறவு பண்டக சாலையில் உப்பிலாமணி, உதவிதலைவர் ஏ.செல்லத்துரை, டி.ஞானமூர்த்தி, ஏ.பெரியண்ணன், எம்.முத்துசாமி ஆகியோர் ஏற்கனவே இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது உதவி தலைவராக உப்பிலாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: