சேலம்,
எல்ஐசி பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிக்காய்) சார்பில் தர்ணா போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.

எல்ஐசி பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம்வழங்க வேண்டும். டியு லிஸ்ட் முழு முகவரியுடன் அச்சு வடிவில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எல்ஐசி சேலம் கோட்ட அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிக்காய்) சார்பில் தர்ணா போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் முருகன் நாயனார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜேஸ் சிறப்புறையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலியபெருமாள், தலைவர் லட்சுமி சிதம்பரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சேலம், தரும்புரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டு திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: