ஈரோடு,
வெண்டிபாளையம் ஜிஎஸ்எஸ் காலனி பொதுமக்களுக்கு வருவாய்துறை சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் திங்களன்று மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் ஜிஎஸ்எஸ் காலனியில் 137 குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வசிப்பதால் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அவல்பூந்துறை மற்றும் மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் இடங்கள் ஒதுக்குவதாக வருவாய்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதன்படி ஒரு பகுதியினருக்கு மட்டும் இடம் ஒதுக்கப்பட்டு பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் மனு அளித்தனர். இதில் விடுபட்டவர்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு உரிய இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: