ஈரோடு,
மத்திய அரசின் மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்திருத்தத்திற்கு ஈரோடு மாவட்ட யூஸ்டு கார் அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட யூஸ்டு கார் டீலர்ஸ் அசோசியேசன் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் மோட்டார் வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள், மெக்கானிக், லேத் உரிமையாளர்கள், உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அரசிடமிருந்து எவ்வித சலுகைகளும் கிடைக்காத நிலையில் சுய தொழில் மூலம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம். இந்நிலையில் எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க கூடிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்று வருகிறது.

இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மோட்டார் வாகன உரிமையாளர்கள், மெக்கானிக் என இத்தொழில் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இம்மசோதாவை தடுத்தி நிறுத்த மாவட்ட நிர்வாகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையெனில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.