நாமக்கல்,
மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் வீ.ராமசாமி நினைவு தின பொதுக்கூட்டம் எலச்சிபாளையத்தில் நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோளிப்பள்ளி தோழர் வீ.ராமசாமி 19 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிறன்று எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் சிறப்புரையற்றினர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, கே.தங்கமணி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் எஸ்.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். கோமதி ஆகியோர் பேசினர். முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நிதியாக பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தை முதல் தவணையாக மூத்த தோழர்.சி.சுந்தரம் தலைமையில் கட்சி ஊழியர்கள், மாநில குழு உறுப்பினர் பாலபாரதியிடம் வழங்கினர். இறுதியாக ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.குப்புசாமி நன்றி கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.