திருப்பூர்,
ரயில்வே கிராசிங் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக ஆக. 7ம் தேதி முதல் ஆக. 22ம் தேதி வரை கோவை – திருப்பூர் இடையே ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை – திருப்பூர் இடையே 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரையும், பெங்களூர் இன்டர்சிட்டி 15 முதல் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். 7ம் தேதி, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். 11ம் தேதி, கோவை எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம், சதாப்திரயில் 40 நிமிடங்கள், இந்தூர் எக்ஸ்பிரஸ் 35 நிமிடங்கள், எர்ணா குளம் இன்டர்சிட்டி 30 நிமிடங்கள், கோவை எக்ஸ்பிரஸ், மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். 17ம் தேதி, சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 1 மணி 25 நிமிடங்களும், சதாப்தி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் பிரவுணி எக்ஸ்பிரஸ், எக்மோர் ரயில், ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ஆகியவை 1 மணி 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். 10 மற்றும் 18ம் தேதி, பாட்னா எக்ஸ்பிரஸ் 1மணி நேரம்15 நிமிடங்களும், பெங்களூர் இன்டர்சிட்டி, சென்னை சதாப்தி ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். 21ம் தேதி, கோவை எக்ஸ்பிரஸ், கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 நிமிடங்களும், பிலாபூர் ரயில் 30 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும். 22ம் தேதி, கோவை எக்ஸ்பிரஸ் 1 மணி 20 நிமிடங்களும், சதாப்தி எக்ஸ்பிரஸ் 1 மணி நேரமும், எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 30 நிமிடங்களும், சென்னை சென்ட்ரல் ரயில் 120 நிமிடங்களும் தாமதமாகஇயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: