நாமக்கல்,
இலவச வீட்டுமனை கோரி கொக்கராயன் பேட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திங்களன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த அம்மாசிபாளையம் கொக்கராயன் பேட்டை பகுதியில் வசித்திடும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும். இதற்கு தடையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆளும் கட்சி பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று கொக்கராயன் பேட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாநிலக் குழு உறுப்பினர் எம்.சம்பூர்ணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பள்ளிபாளையம் வட்டார வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு சில வாரங்களில் இலவச வீட்டு மனை நிலம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: