ஜெகார்த்தா,
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 91 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் லோம்பக் தீவில் ஞாயிறன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கடலோர பகுதியில் 10. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை திரும்ப பெற பெற்றது.

பல வினாடிகள் நேரம் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், பிரபல சுற்றுலாப் பகுதியான பாலித் தீவு, கிழக்கு ஜாவா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 91 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 29ம் தேதி லோம்பக் மற்றும் கிழக்கு பாலி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: