கோவை,
கரும்புக்கடை பகுதியில் இணைப்பு சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அத்திட்டத்தை கைவிட கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் பகுதி வரை 6 கிலோ மீட்டர் தூரம் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த இணைப்புசாலை அமைப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். ஆகவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என சாரமேடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயற்சிக்கின்றனர். இதனால் 300 வீடுகள் பாதிக்கப்படுமெனவும் இத்திட்டத்தை கைவிடவில்லையென்றால் நாங்கள் நடுத்தெருவிலே நிற்க வேண்டிய நிலை ஏற்படும். மீறி அரசு முயற்சிக்குமேயானால் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தலைமை செயலகத்தில் ஒப்படைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: