கோவை,
பொதுப்போக்குவரத்தை சீர்குலைக்கும் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஆக.7 ஆம் தேதியன்று இரண்டு மையங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக சாலை போக்குவரத்தை கார்ப்ரேட்டுகள் கபளீகரம் செய்வதற்கு மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாககுற்றம்சாட்டி அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஆக.7 ஆம் தேதியன்று மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இதன்தொடர்ச்சியாக சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் ஆக.7 ஆம் தேதி செவ்வயான்று கோவை காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டமும், இதேபோல டெம்போ, டேக்சி, வேன், லாரி, மேக்சிகேப், டாடாஏசி உள்ளிட்ட சாலை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டவுன்ஹால் பகுதியிலும் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் தொழிலில் தொடர்புடைய அனைத்து தொழிற்சங்கங்களின் தொழிலாளர்களும் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: