நாகப்பட்டினம்,
திருமருகல் அருகே சாதி வெறியால் ஆணவக் கொலைக்கு இளம்பெண் நந்தினி பலியானார். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடி ஊராட்சி ஆனைக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நந்தினி(21). இவரது தந்தை நாகராஜ். தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவந்தார். தாய் இறந்துவிட்டார். பக்கத்துக் கிராமமான குல மாணிக்கத்தில் வாழ்ந்த தாய்மாமன் பொறுப்பில் நந்தினி இருந்தார். நாகப்பட்டினம், இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர் நந்தினி.

இந்நிலையில் ஆனைக் கோயில் கிராமம் அருகே உள்ள தண்ணீர்ப்பந்தல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் தமிழரசன். தலித் வகுப்பைச் சார்ந்த தமிழரசன் ஜே.சி.பி. கனரக ஓட்டுநராக சென்னையில் இருக்கிறார். தமிழர சனும், நந்தினியும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இந்தச் செய்தி பெண்ணின் தாய்மாமனுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தமிழரசன் சென்னையில் இருக்கும் போது, கடந்த 07.07.2018 அன்று, நந்தினி காதலன் வீட்டுக்கு வந்துவிட்டார். தமிழரசனின் தாயார் பயந்து போய், நந்தினியை அவர் வீட்டுக்கே திரும்பிச் செல்லுமாறு திருப்பி அனுப்பிவிட்டார். இந்தத் தகவல் தாய்மாமனுக்குத் தெரியவர, நந்தினியைத் தன் வீட்டுக்குக் கொண்டு போய் சிறை வைப்பது போல், வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்து, வெளி நாட்டில் இருந்த தந்தைக்குத் தகவல் கொடுக்க உடனே தந்தையும் வந்துள்ளார்.

மர்ம மரணம்
இந்த நிலையில், 13.07.2018 அன்று அதிகாலை நந்தினி விஷம் அருந்தி இறந்ததாகச் செய்தி பரவவே அக்கம்பக்கத்தார், நாகூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக தந்தையின் மீது வெறுமனே, இந்தியத் தண்டனைச் சட்டம் 306-ன் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்து, நந்தினியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் ப.சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை ஒன்றியச் செயலாளர் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், சி.பி.எம்.திருமருகல் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால் உள்ளிட்டோர் நந்தினியின் மரணம் பற்றி ஆய்வு செய்தனர். நந்தினி 6 நாட்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அவர் வெளியேஎங்கும் செல்ல முடியாத நிலையில், அவருக்கு எப்படி விஷம் கிடைத்தது. உறுதியாக இதுபெண்ணின் தந்தை, தாய்மாமன் சேர்ந்து செய்த சாதி ஆணவக் கொலை தான் என்று நம்பப்படு கிறது. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தே, நாகூர் காவல்துறை யினர் கொலையை மூடி மறைக் கிறார்கள் என்று கிராமத்தார் கருதுகிறார்கள்.

சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
நந்தினியின் மர்ம மரணம் வெளிச்சத்திற்கு வர வேண்டும். நந்தினி சாதி ஆணவக் கொலைக்கு ஆளாகி பலியாகியுள்ளார். இதற்குக் காரணமான வர்களைக் கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருமருகல் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, கட்சியின் மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி தலைமை வகித்துக் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன், ஒன்றியச் செயலாளர் எம்.ஜெய பால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், பி.கே.ராஜேந்திரன், எம்.முருகையன், பி.டி.பகு, நகரச் செயலாளர் எம்.பெரியசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பொன்மணி, சொ.கிருஷ்ணமூர்த்தி, சு.மணி, எம்.பி.குணசேகரன், கே.சித் தார்த்தன், எஸ்.விஜயகுமார், நாகூர் ரகுமான், ஏ.கே.குமார், டி.தினேஷ்பாபு, கே.பி.மார்க்ஸ்,எஸ்.ஸ்டாலின்பாபு, ஜி.ராமச் சந்திரன், எஸ்.தியாகராஜன், எஸ்.ஆர்.ராஜேந்திரன், எம்.சிங்கார வேலு, கோ.முருகையன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.