திருப்பூர்,
திருப்பூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஞாயிறன்று மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார்.

திருப்பூர் கோட்டம் கொங்கு நகர் உதவி செயற்பொறியாளர் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பால்ராஜ் (48) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று திருப்பூர், எம்.ஜி.ஆர். நகர் 4 வது வீதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு ஒப்பந்த தொழிலாளி பால்ராஜிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து, பால்ராஜ் சம்பந்தப்பட்ட மின் மாற்றியில் சரி செய்யும் போது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திருப்பூர், மின்வாரியத்தில் தொடரும் விபத்துக்களுக்கு அதிகாரிகளின் அலட்சியமும் மின் மாற்றிகளை தொடர்ந்து சரிவர பராமரிப்பு பணிகள் நடக்காமல் இருப்பதுதான் காரணம் என மின்வாரிய தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.