ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்கும் அரசு கோசாலையில் 18 பசுக்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளன.

இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசுக்குண்டர்கள் பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். பசுக்களை இறைச்சிக்காக கடத்துவ தாக கூறி, பலர் கொடூரமான முறையில் அடித்துகொலை செய்யப்படுகின்றனர்.  வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதங்கள் அரங்கேறு கின்றன. ஆங்காங்கே இருக்கும் பசுக்களைமீட்டு, மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப் படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ரோஹாசி எனும் கிராமத்தில் அரசு கோசாலையில் 18 பசு மாடுகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் ஜானக் பிரசாத் பதக் செய்தியாளர் களிடம் கூறுகையில், கோசாலையில் இருந்து இறந்த பசுக்களின் உடல்களை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அங்கு பசுக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு தேவையான உணவை கோசாலை நிர்வாகிகள் வழங்கவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், மிகச்சிறிய அறையில் வைத்து பூட்டப்பட்ட அதிகப்படியான பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தன என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: