கோவை,
சேலம் – சென்னை இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் தடையை மீறி சேலம் நோக்கி நடைபயணம் செல்ல முயன்றனர். மாநில செயலாளர் குமரசாமி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நடைபயணம் மேற்கொண்டவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: