புதுச்சேரி,
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேட்டி அதிகாரிகளை மிரட்டி வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுவையில் வழக்கம்போல் கவர்னர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பல இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு செய்யலாம். ஆனால், விதிமுறைகளை மீறி அதிகாரிகளின் கூட்டத்தை நடத்த கூடாது.தனது உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அதிகாரிகளை ஆளுநர் மிரட்டுகிறார். அதிகாரிகளுக்கு அவர் நேரடியாக உத்தரவிட முடியாது. கவர்னர் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனை அவர் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். நானும் பலமுறை எடுத்து கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.