வாஷிங்டன்:
சிட்டி ஓபன் என அழைக்கப்படும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஒரு வார காலமாக வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது.

வெள்ளியன்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே,ருமேனியாவின் மேரியஸ் கோபிலை எதிர்கொண்டார்.மழை காரணமாக ஆட்டம் மிகவும் காலதாமதமாக தொடங்கியது.தொடக்கம் முதலே இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் குவித்ததால் முதல் செட்டே டை-பிரேக்கர் வரை சென்றது.முதல் செட்டை மேரியஸ் கோபில் 7-6 (7-5) என்ற கணக்கில் கைப்பற்றி முர்ரேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இரண்டாவது செட்டில் சுதாரித்துக்கொண்ட ஆன்டி முர்ரே,தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் 6-3 என்ற புள்ளி கணக்கில் அந்த சேட்டை கைப்பற்ற ஆட்டம் சூடுபிடித்தது.
வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் புள்ளிகளை பெற இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இறுதியில் முர்ரே 7-6 (7-4) எனக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.காயம் காரணமாக 11 மாதம் ஓய்வில் இருந்த ஆன்டி முர்ரே கடும் போராட்டத்துக்கிடயே (8 மணி 11 நிமிடம்) வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய சந்தோசத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

8 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டி (மழையால் தடைபட்ட நேரத்தையும் சேர்த்து) மிக சுவாரஸ்யமாக நடைபெற்றாலும் ஆட்டம் முடிவடைவதற்கு அதிகாலை 3 மணியாகிவிட்டது.டென்னிஸ் வீரர்கள் அடுத்த போட்டியில் களமிறங்க அதிகாலை 4 மணிக்கு எழுந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.ஆனால்,ஆன்டி முர்ரே எதிர்கொண்ட நான்காவது சுற்று ஆட்டம் நிறைவு பெறவே 3 மணியாகிவிட்டது.அப்புறம் மைதானத்தை விட்டு செய்தியாளர் சந்திப்பு எல்லாம் நிறைவு பெற்று அதிகாலை 5 மணிக்குதான் ஓய்வறைக்கு செல்ல முடியும்.5 மணிக்கு ஓய்வறைக்கு சென்றால் தூங்குவது எப்படி? அடுத்த ஆட்டத்திற்கு பயிற்சி மேற்கொள்ளுவது எப்படி? இதெயெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல் போட்டியை இன்றைக்குள் முடிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் செயல்படும் அமெரிக்க டென்னிஸ் நிர்வாகத்தின் செயல்பாடு கண்டத்துக்குரியது.

இந்நிலையில் எனக்கு ஓய்வு மற்றும் பயிற்சிக்கான நேரம் கிடைக்காததால் காலிறுதி ஆட்டத்தில் விலகுவதாக கூறி போட்டியிலுருந்து வெளியேறினார் ஆன்டி முர்ரே.
இதுகுறித்து முர்ரே கூறியதாவது,”போட்டி அதிகாலை 3 மணி வரை நிறைவுபெற்றதால்,அடுத்த சுற்றுக்கு தயாராகுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.மனதை திடப்படுத்திக்கொண்டு களமிறங்கினாலும்,எனது உடல்நிலை ஒத்துழைப்பது சந்தேகம்தான்.அதிகாலை 3 மணிக்கு வரை ஆட்டத்தை நடத்துவது பல்வேறு வகையில் சிக்கலை ஏற்படுத்தும்.இது வீரர்களுக்கு மட்டுமல்ல,ஊழியர்கள்,நடுவர்கள்,ரசிகர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும்.நான் உடனடியாக அடுத்த போட்டிக்கு தயாராகலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.ஆனால் அது நடக்காத காரியம் என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.