கொல்கத்தா :

கொல்கத்தாவில் குத்காட் எனப்படும் வீட்டு வசதி கூட்டுறவு வாரிய குடியிருப்பில் தங்கியுள்ள அஃப்தாப் அல்லாம், மொஜ்டபா ஹசன், நாசிர் சாய்க் மற்றும் சாக்ட் சாய்க் என்ற நான்கு டாக்டர்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் மற்ற தரப்பிலிருந்து குடியிருப்பில் வசிக்க எதிர்ப்புகள் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நாங்கள் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால் மட்டும் பல வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கு வீட்டை வாடகைக்கு அளிக்க மறுத்து விட்டனர். சில வார காலம் தேடி பல மறுப்புக்கு பிறகு இந்த வீட்டில் குடியேறினோம். நாங்கள் அமைதியாக இங்கு வாழ்ந்து வருகிறோம், ஆனால் எங்கள் அண்டை வீட்டார் நாங்கள் இங்கு வசித்து வருவதை முற்றிலுமாக எதிர்க்கின்றார்கள். தங்களிடம் அத்துமீறி அவதூறாக நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு நடந்து கொள்ள இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை  என டிஓஐ ஏட்டிற்கு அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அஃப்தாப் அல்லாம் கூறியுள்ளார்.

குடியிருப்பின் உரிமையாளர் சுதிப்தா மித்ரா இவர்கள் தங்குவதில் தனக்கு எந்த ஆட்சேபணையில்லை எனவும், ஆனால் மற்ற குடியிருப்புவாசிகள் தரப்பிலிருந்து தனக்கு அழுத்தம் வருவதாக அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.