பர்மிங்ஹாம்:
இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்று பயணம் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் புதனன்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் (80 ரன்கள்) அரைசத உதவியால் முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர்,தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் திணறியது.ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் கேப்டன் என்ற விதத்தில் பொறுப்புடன் விளையாடி கேப்டன் கோலி (143 ரன்கள்) சதமடிக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 274 எடுத்தது.13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இஷாந்த் சர்மா வேகத்தை சமாளிக்க முடியாமல் 180 ரன்களில் சுருண்டது.இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாம் குரான் 63 ரன்கள் எடுத்தார்.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது.கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி வீரர்கள்,பென் ஸ்டோக்ஸ் வேகத்தை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டாய் சரிந்தனர்.

ஹர்திக் பாண்டியா மட்டும் ஓரளவு போராடினார் அவரும் ஆட்டமிழக்க, இந்திய அணி 54.2 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோலி 51 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி (வியாழனன்று) லண்டனில் துவங்குகிறது.

Leave A Reply

%d bloggers like this: