புதுதில்லி :

தில்லி மெட்ரோ இரயில் வாரியம் பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுப்புற சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாகவும் புதியதாக மின்சார பேட்டரியில் இயங்கும் இ-ரிக்‌ஷா சேவையை துவங்கியுள்ளது. நேற்று நடந்த துவக்க விழாவில் முதற்கட்டமாக 100 ரிக்‌ஷாக்களை தில்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் கொடியசைத்து துவக்கி வைத்தார். தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள 10 இரயில் நிலையங்களில் இந்த சேவை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

smart E என்றழைக்கப்படும் GPS வசதி கொண்ட இந்த வாகனத்திற்கு முதல் 2 கிலோமீட்டருக்கு இதன் அடிப்படை கட்டணம் 10 ரூபாய் எனவும், அதற்கு மேலான ஒவ்வொரு கிலோமீட்டர் தொலைவிற்கும் 5 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: