புதுதில்லி :

இந்த ஆண்டு மட்டும் முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்த 700 இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

பசு பாதுகாப்பு என்ற பெயரிலும், வேறு சில வழிகளிலும் வதந்திகள் பரப்பப்பட்டு கொடூர கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முகநூலில் 499, டிவிட்டரில் 88, யூடியூப்பில் 57, இன்ஸ்ட்ராகிராமில் 25 மற்றும் தம்ளரில் 28 என சுமார் 700 இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தள நிறுவனங்கள் வதந்திகள் பரவுவதை தடுக்க தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.