புதுதில்லி;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில் பங்கேற்க புதுதில்லிக்கு வந்த கேரளமுதல்வர் பினராயி விஜயன் தில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் சனிக்கிழமையன்று தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தனது கையில் கத்தியுடன் கேரள முதல்வர் அறையை நோக்கிச் சென்றார்.

உடனே இல்லத்தில் பாகாப்பிற்காக நின்றிருந்த முதல்வரின் தனிப் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி மடக்கிப் பிடித்து, அவரை தில்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட நபர், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த விமல் ராஜ் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரிந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.