சென்னை: 
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்ற முன்னாள் முதல்வரும் திமுக தலை
வருமான கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னைக்கு வருகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர். அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதியைப் பார்க்கிறார். பின்னர்,
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் நலம் விசாரிக்க உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: