சென்னை;
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் சனிக்கிழ
மையன்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

காவேரி மருத்துவமனைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்தார். அங்கு மு.க.
ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோரிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சனிக்கிழமையன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோரிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துகள். மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி என அவர் கூறினார்.திமுக தலைவர் கருணாநிதிக்கு கை, கால் அசைவுக்காக பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: