மதுரை;
மதுரை மற்றும் வேலூர் மத்திய சிறையில் இருந்து நன்னடத்தை விதியின் கீழ் 41 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனா்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை சிறைவாசிகளுக்கு நன்னடத்தை விதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி மதுரை மத்திய சிறையில் இருந்து இரண்டாம் கட்டமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 16 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனா்.
சிறை அதிகாரி, நன்னடத்தை அதிகாரி ஒப்புதலுடன் 16 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, நன்னடத்தை விதியின் கீழ் விடுவிக்கப்பட்டனா்.

முதற்கட்டமாக கடந்த 25 ஆம் தேதி மாரியப்பன் என்ற ஆயுள் சிறைவாசி விடுவிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை 2 ஆம் கட்டமாக 16 பேர் என மொத்தம் 17 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி வேலூர் மத்திய சிறையில் இருந்து 7 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக சனிக்கிழமையன்று 24 கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.