அமராவதி,
ஆந்திராவில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹதி பெல்கல் என்ற இடத்தில் கல்குவாரி ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் வெள்ளியன்று இரவு வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, கற்களை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.