சண்டிகர் :

தந்தையின் மாட்டு பண்ணையில் மாட்டை திருட வந்ததாக கூறி மூன்று சகோதரர்கள் சேர்ந்து தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

அரியானா மாநிலம் பால்வால் மாவட்டத்தில் உள்ள பரோலா கிராமத்தில் ஸ்ராதாராம் என்பவரின் மகன்கள் பீர் சிங், பிரகாஷ் மற்றும் ராம் கிஷான் ஆகியோர் மாட்டு பண்ணையில் மாட்டை திருட வந்ததாக மூவரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, பால்வால் காவல் கண்காணிப்பாளர் வாஸீம் அக்ரம் கூறுகையில், இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் ராம் கிஷான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: