சிவகாசி;
சிவகாசியில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர் அச்சடிக்கும் பணி தொடங்கியது. இதில் வித, விதமாக புதிய ஆல்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தப் படியாக அச்சு தொழிலும் சிறந்து விளங்கி வருவது சிவகாசி தான். இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, லண்டன், போன்ற வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கான நல்ல நேரம் பார்ப்பதில் சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்கள் முக்கிய அங்கம் வைக்கிறது. காலண்டர் தயாரிப்பு மூலம் ஆண்டுக்கு 100 கோடிக்கு வர்த்தகம் சிவகாசியில் நடைபெறுகிறது. அச்சு மற்றும் டை கட்டிங் தரமாக இருப்பதால் சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்களுக்கு தனி மவுசு தான்.

இந்தநிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அடுத்த ஆங்கில ஆண்டிற்கான காலண்டர் அச்சிடும் பணியானது சிவகாசி முழுவதும் தொடங்கப்படும். அந்த வகையில் வெள்ளியன்று, சிவகாசியில் 2019 ஆண்டிற்கான தினசரி காலண்டரின் புதிய ஆல்பம்
வெளியிடப்பட்டு அச்சிடும் பணி தொடங்கப்பட்டது.

இதையடுத்து, காலண்டர் தயாரிக்கும் பணி தொடங்கியது. இங்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி , தெலுங்கு போன்ற மொழிகளில் தினசரி காலண்டர் தயாரிக்கப்படுகிறது. மேலும், 200க்கு மேற்பபட்ட வடிவங்களில் காலண்டர் தயார் செய்யப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டிற்கான புதிய வரவாக, தமிழ்ர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ஞாபகம் படுத்தும் விதமாக மாத காலண்டர் மற்றும் தினசரி காலண்டர்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரியல் ஆர்ட், பாயில் ஸ் கோல்டு, சில்வர் பாயில் ஸ், லேசர் பாடலில்ஸ், டை கட்டிங், விஐபி காலண்டர், 3,டி காலண்டர் என 50 க்கு மேற்பட்ட நவீன காலண்டர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், சிறிய அளவிலிருந்து 6 x 8, 10×15, 12×18, 15×20, 14 x 23, 18 x 23, 23 x 36, 24 x 37 போன்ற மெகா காலண்டர்களும் தயாரிக்கப்படு கிறது. குறைந்தபட்சம் ரூ. 15 முதல் ரூ.1800 வரை  விலையில் காலண்டர்கள் விற்பனைக்காக உள்ளன. இதுகுறித்து, தினசரி காலண்டர் உற்பத்தியாளரும் , தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளருமான ஜெயசங்கர் கூறுகையில் : காகிதம், அட்டை, பிரிண்டிங் வண்ண மை, தொழிலாளர்களின் கூலி உயர்வு, போன்றவற்றாலும், ஜிஎஸ்டி வரியாலும் தினசரி காலண்டரின் விலை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார். அதேநேரத்தில், கடந்தாண்டைப் போல் தடையின்றி மின்சாரம் கிடைத்தால், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் காலண்டர்களை சப்ளை செய்ய முடியும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.