தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதர வாக வாதாடி பாதுகாத்து வரும் சிபிஎம் வழக்கறிஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்
கொல்லப்பட்டதுடன் 30-க்கும் மேற்பட்டோர் குண்டு காயமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்
துறை தாக்குதலில் காயமும் அடைந்தனர். இந்த போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் ஆயிரக் கணக்கானோர் மீது பல்வேறு பிரிவு களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. ஒரு பகுதி யினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டதுடன் சிலர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி, மதுரை வழக்கறிஞர்கள் ஆஜராகி வருகிறார்கள்.இவ்வாறு பாதிக்கப்பட்ட வர்களுக்கு சட்ட உதவிகள் செய்யும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சீனிவாசராகவன், சுப்பு
முத்துராமலிங்கம், வாமனன், மோகன் காந்தி, கிஷோர் ஆகி யோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் முயற்சி யால் போராட்டக்குழு உறுப்பினர்கள் வேல்ராஜ், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உள்ளிட்டு 153க்கும் மேற்பட்ட மனுக்களில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் பெற்றுதந்துள்ளனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டத் தலைவர் இசக்கிதுரை மற்றும் சிலர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான
விசாரணை நடைபெற்றது. நீதிபதி சி.டி.செல்வம், பசீர் அஹமது ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்ற விசாரணையில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சீனிவாச ராகவன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் நாம்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் இசக்கிதுரை, குருபரணி, அருண் என்ற ராஜா என்ற ஜோக்கர் ராஜா ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து வழக்குகளில் வாதாடி பாதுகாத்து வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்களுக்கு கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.