டாக்கா;
வங்கதேசத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சிறுவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாக்காவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் மற்றும் சிறுமி மீது மோதியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆங்காங்கே சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக மாணவர்கள் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாருடன் மோதலும் நடந்தது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது.

வெள்ளியன்று ஐந்தாவது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டாக்காவில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.