கரூர்;
அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆசிரியர்களை ஒருமையில் தவறாக பேசிய முதல்வரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. முதலமைச்சர் நாற்காலியின் மாண்பு மற்றும் பண்பு தெரியாமல் பேசி வரும் எடப்பாடியின் செயல்பாடு வேதனையானது.

தமிழக அமைச்சர்கள் காமெடியர்களாக பேட்டி அளித்து பேசி வருகின்றனர். 1974ல் இருந்து கட்சியில் இருக்கிறேன் என கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, 1989ல் அவரது சொத்து மதிப்பு என்ன? 2007ல் மீண்டும் கட்சிக்குள் வந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆன பின்பு தற்போது அவரின் சொத்து மதிப்பு என்னவென்று கணக்கு காட்டுவாரா? அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான்.அது போல தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடியின் ஆட்சி உள்ளது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: