விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்கு மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்கிற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பற்றி அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.

அவர்களுக்கு இந்த அரசின் முதன்மையான உதவி ஏன் தேவைப்படுகிறது என்ற கேள்வி முக்கியமானது. சமீபத்தில் லைவ் மின்ட் ஏட்டில் வெளியாகியுள்ள ஒரு விபரத்தின்படி மகாராஷ்டிரா மாநிலத்தை எடுத்துக் கொண்டோமானால், பருத்தி, நெல், சோயாபீன்ஸ், கோதுமை, பருப்பு வகைகள், உள்ளிட்ட அனைத்து பிரதான விளைபொருட்களின் உற்பத்திச் செலவு, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விலைகளை விட மிகக்கடுமையாக அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, நிலக்கடலையை மட்டும் எடுத்துக் கொண்டோமானால், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய – நிலக்கடலை அதிகம் விளையும் மாநிலங்களில் உற்பத்திச் செலவைவிட விவசாயிக்கு கிடைக்கிற விலை மிகக்கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நிலக்கடலை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சுமார் 40 சதவீதம் அளவிற்கு நட்டம்தான் ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி, தனது கூட்டுக்களவாணி முதலாளிகளின் மகிழ்ச்சியே பெரிது. இந்த எளிய விவசாயிகளின் துயரம் அல்ல.

Leave a Reply

You must be logged in to post a comment.