சென்னை;
தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் பணம் பெற்றுக்கொண்டு முறை கேட்டில் ஈடுபட்ட புகாரில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, பேரா சிரியர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர் களில் மூன்று லட்சத்து 2 ஆயிரம் பேர் மறு மதிப்பீடு செய்யக் கோரி விண்ணப்பித்தனர். அவர்களில் 90 ஆயிரம் பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். வழக்கத்தை விட மிக அதிகமானவர்கள் மறு மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றதன் பின்னணியில் முறைகேடு இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதில் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, உள்ளிட்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
உமா, தனக்கு வேண்டிய அல்லது தனது முறைகேட்டிற்கு துணை செய்யும் பேராசியர்கள் மற்றும் ஊழியர்களின் துணையுடன் முறைகேட்டை அரங்கேற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக உமா, திண்டிவனம் கல்லூரி பேராசிரியர்கள் சிவகுமார், சுந்தர ராஜன் மற்றும் அன்புசெல்வன், பிரதீபா, பிரகதீஸ்வர், ராமேஷ் கண்ணன், ரமேஷ் உள்ளிட்ட பத்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைகேட்டில் உமா பதவியில் இருந்த மூன்றாண்டு கால மும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இதன் மூலம் 240 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாறி இருக்கலாம் என்றும்
காவல்துறையினர் சந்தேகிக் கிறார்கள். இந்நிலையில் முன்னாள் தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவை பேராசிரியர் பணியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் பணி யிடை நீக்கம் செய்துள்ளது. தற்போது தகவல் அறிவியல் மற்றும் தொழில்
நுட்பத்துறையில் பேராசிரியையாக பணியாற்றி வரும் உமா மீது துறை
சார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதில், தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உமாவை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல, மறுமதிப்பீடு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரி இயக்குநர் விஜயகுமார், அதே கல்லூரியில் கணிதத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவக்குமார் ஆகியோரும் அண்ணா பல்கலைக்கழகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துறைசார்ந்த விசாரணையின் அடிப்படையில், தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்பதால், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டில் பல்கலை கழகத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.