சென்னை;
அண்ணா பல்கலைக் கழக தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டில் பணம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்ற முறைகேடு தொடர் பாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தேர்ச்சி பெறாத மாண வர்களுக்கு மறுகூட்டலில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா உள்பட 10 ஆசிரியர்கள் மீது லஞ்சஒழிப்பு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டு முறை கேடு தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெள்ளியன்று விசாரணை நடத்தினர்.
மறுமதிப்பீட்டில் 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது குறித்து விசாரணை நடத்தப்
படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: